சம்பா பயிரில் வெட்டுக்கிளி தாக்குதலைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரில் வெட்டுக்கிளி தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரில் வெட்டுக்கிளி தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முத்துப்பேட்டை அருகேயுள்ள உப்பூர், ஆலங்காடு, வடகாடு, கோவிலூர், பாண்டி, மருதவனம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களில் அண்மை காலமாக வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக,  ஆலங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முத்துப்பேட்டை வேளாண்மை துறை அலுவலர் சங்கர் தலைமை வகித்தார். இதில் திருவாரூர் வேளாண்மை துணை இயக்குநர் சிவகுமார், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மதிராஜன்,  தஞ்சை மண் மற்றும் நீர் மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய  பேராசிரியை  நளினி,  நீடாமங்கலம் வேளாண் அறிவியல் உதவி பேராசிரியர் ரமேஷ்,  திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். வெட்டுக்கிளி தாக்குதலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட வயல்களில் பரவலாக இரவு நேரங்களில் சொக்கப்பனை வைத்தல் மற்றும் ஏக்கர் ஒன்றுக்கு குளோர்பைரிபாஸ் 500 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் கொண்டு நெற்பயிர் நன்கு நனையும்படி விவசாயிகள் ஒருங்கிணைந்து தங்கள் நிலத்தில் தெளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இம்முகாமில், உப்பூர் முன்னோடி விவசாயிகள் வீரசேகரன், சண்முகம், ராஜேந்திரன்,  ஆலங்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மோகன், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com