சார்-பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 23,250 பறிமுதல்

திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 23,250-ஐ பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 23,250-ஐ பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை  ஆய்வாளர்கள் ரத்தினவள்ளி, மனோகரன் ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தை மூடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. சார் பதிவாளர் பசுபதி மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் 9 ஊழியர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து,  ரசீது மூலம் பெறப்பட்ட தொகை கணக்கிடப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ. 23,250-ஐ பறிமுதல் செய்து, 14 ஆவணங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் எடுத்துச் சென்றனர். சார் பதிவாளர் பசுபதி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com