தாயால் கைவிடப்பட்ட குழந்தை தத்து நிறுவனத்திடம் ஒப்படைப்பு

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாயால் கைவிடப்பட்ட பெண் குழந்தை  வியாழக்கிழமை தத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாயால் கைவிடப்பட்ட பெண் குழந்தை  வியாழக்கிழமை தத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது:
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக. 1-ஆம் தேதி செல்வராணி என்பவர், தனக்குப் பிறந்த 1.6 கிலோ கிராம் எடையுள்ள பெண் குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தைக்கு நோய்த் தொற்று, மூச்சுத் திணறல் மற்றும் எடைக்குறைவு காரணத்தால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ஆக. 4-ஆம் தேதி பேறுகால பின்கவனிப்பு பிரிவிலிருந்து தவறான முகவரியை கொடுத்துவிட்டு, செல்வராணி குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளார்.
அதன்பிறகு, அக்குழந்தைக்கு 72 நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு உடல் தேறியபிறகு ஆட்சியருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்சியரின் உத்தரவின்பேரில், குழந்தையை மதுரை கிரேஸி கென்னட் பவுண்டேசன் சிறப்பு தத்து நிறுவனத்திடம் ஒப்படைக்க சமூக நலத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு, வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது என்றார் அவர்.
தத்து நிறுவன ஊழியர்களிடம் குழந்தையை ஒப்படைக்கும்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறைத் தலைவர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் நிர்மலாசொருபராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com