முளைக்காத வயல்களில் மீண்டும் விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் பயிர் முளைக்காததால் சுமார் 500 ஏக்கரில் மீண்டும் இரண்டாவது முறையாக விதை நெல் தெளிக்கும் பணியில்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் பயிர் முளைக்காததால் சுமார் 500 ஏக்கரில் மீண்டும் இரண்டாவது முறையாக விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வேளூர், மணலி ஊராட்சியில் சுமார் 500 ஏக்கரில் கோடை உழவு 4 முறை செய்து அரசு வேளாண்மை கிடங்குகள் மற்றும் தனியார் கடைகளில் விதைச் சான்று அலுவலர்களிடத்தில் சான்று பெற்ற விதைகளை வாங்கி நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். ஆனால், இப்பகுதியில் பயிர்கள் சரிவர முளைக்கவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை, விதைச்சான்று அலுவலர்களுடனான கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (அக். 13) நடைபெற்றது. கூட்டத்தில் விதை நெல் சரிவர முளைக்காத வயல்களில் மீண்டும் இரண்டாவது முறையாக விதை நெல் தெளிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்பேரில், திருத்துறைப்பூண்டி அருகே நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் பயிர் முளைக்காததால் சுமார் 500 ஏக்கரில் மீண்டும் இரண்டாவது முறையாக விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காவிரி மீட்புக் குழுவின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தை. ஜெயபால் கூறியது:
காவிரி கடைமடைப்பகுதி விவசாயிகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாக பெரும் இழப்பைச் சந்தித்த நிலையில், நிகழாண்டு கடுமையான சிரமத்துக்கிடையே கோடை உழவு செய்து நேரடி விதைப்பு செய்தனர். ஆனால், விதை சரிவர முளைக்காத நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக சாகுபடி மேற்கொள்ளும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியரும், வேளாண்மைத்துறை உயரதிகாரிகளும் இந்த நிலங்களைப் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் ரவீந்திரன் கூறியது: மணலி, வேளூர் ஊராட்சிகளில் மழை சரிவர பெய்யாத காரணத்தால் விதை முளைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விதைகளில் குறைபாடு இல்லை. எனவே, மாற்று ஏற்பாடாக உரிய நேரத்தில் விதையை மீண்டும் விதைத்து, நிலத்தில் மழை இல்லாத பட்சத்தில் நிலத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும்
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com