கேக்கரை சிவன் கோயிலில் உழவாரப் பணி

திருவாரூர் அருகேயுள்ள கேக்கரை சிவன் கோயிலில் சேலம் அஸ்தம்பட்டி சிவனடியார்கள் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் அருகேயுள்ள கேக்கரை சிவன் கோயிலில் சேலம் அஸ்தம்பட்டி சிவனடியார்கள் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.
கேக்கரை காசிவிஸ்வநாதர் கோயில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோயிலாகும். ராமர் பாதம்பட்ட இடமாக விளங்கும் இக்கோயிலுக்கு வந்த சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ஓம். ஸ்ரீ சதுர்கால பைரவர் உழவாரப் பணி சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் 70-க்கும் மேற்பட்டோர், அதன் தலைவர் சுவாமிநாதன் மற்றும் செயலர் செல்வம் ஆகியோர் தலைமையில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். காலை 6 முதல் மாலை 6 மணி வரை  இப்பணி நடைபெற்றது. கோயிலின் வாசல் முதல் அனைத்து சன்னிதிகளிலும் இருந்த செடி, கொடிகளை அகற்றினர். மேலும், கோயிலின் சன்னிதி, விமானம் மற்றும் சுற்றுச்சுவர்களுக்கு சுண்ணாம்பு மற்றும் மஞ்சள் நிற வர்ணம் அடித்தனர். பின்னர், கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து சிவனடியார் கூட்டத்தின் செயலர் செல்வம் கூறுகையில், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இதுவரையில் 35 சிவன் கோயில்களில் உழவாரப் பணி  செய்துள்ளோம். மேலும், ஒவ்வொரு கோயில்களுக்கும் ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரையில் எங்கள் செலவில் சுண்ணாம்பு மற்றும் வர்ணம் அடித்து தருகிறோம். இதுபோன்று உதவி தேவைப்படுவோர் 9994497003, 9443426070 ஆகிய செல்லிடப் பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com