பேரிடர் கால மீட்புப் பணி: ஆட்சியர் அறிவுறுத்தல்

பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து முதன்மைப் பொறுப்பாளர்கள் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் அறிவுறுத்தினார்.

பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து முதன்மைப் பொறுப்பாளர்கள் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் அறிவுறுத்தினார்.
வடகிழக்குப் பருவ மழையையொட்டி, திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரிடர் கால மீட்பு பணியில் ஈடுபடும் முதன்மை பொறுப்பாளர்களுக்கான மீட்புப் பணிகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாமை சனிக்கிழமை தொடங்கி வைத்து, ஆட்சியர் மேலும் பேசியது:
பயிற்சியின் நோக்கம் புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை ஆபத்திலிருந்து எவ்வாறு மீட்பது என்பதை இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதன்மை பொறுப்பாளர்கள், வருவாய்த்துறையை சேர்ந்தவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் அறிந்து கொள்வதற்காகவே.
இப்பயிற்சி சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசத்ய சாய் சேவை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மூலம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அளிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து பயிற்சி சனிக்கிழமையும், திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் செய்முறை பயிற்சி ஞாயிற்றுக்கிழமையும் அளிக்கப்படும். முகாமில் பங்கேற்றவர்கள் பேரிடர் கால ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பதை முழுமையாக அறிந்து கொண்டு ஆபத்து காலங்களில் துரிதமாக செயல்பட வேண்டுமென்றார் ஆட்சியர்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கோட்டாட்சியர்கள் இரா. முத்துமீனாட்சி, சு. செல்வசுரபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜகோபால், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் என சுமார் 350 பேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com