பாஜகவினரின் உணர்ச்சிகளை திமுக தூண்டுகிறது: ஹெச். ராஜா குற்றச்சாட்டு

பாஜகவினரின் உணர்ச்சிகளை தூண்டும் வேலையில் திமுக ஈடுபடுகிறது என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறினார்.

பாஜகவினரின் உணர்ச்சிகளை தூண்டும் வேலையில் திமுக ஈடுபடுகிறது என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறினார்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரியின் குறுக்கே ஹேமாவதி, கபினி, ஹேரங்கி ஆகிய அணைகளை கர்நாடக அரசு கட்டியபோது, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக எதிர்ப்புக் கூட தெரிவிக்கவில்லை. இப்பிரச்னை தொடர்பாக, கடந்த 1970 -ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி, சட்டப் பேரவையில் பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டக்கூடாது என நாங்கள் சொல்லவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு  ஆதாரம் உள்ளது.
திமுக ஆட்சியில் இருந்த காலத்தில், அணைகள் கட்டாமல், காவிரி டெல்டா  மாவட்ட  விவசாயிகளைக் காப்பாற்றத் தவறியவர்கள், இன்று வேஷம் போடுகிறார்கள். 
தமிழகத்தில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத் தரக்கூடிய, ராணுவ தொழிற்நுட்ப பூங்காவை, திறந்து வைக்க வருகை தந்த பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டியது கண்டிக்கத்தக்கது. எந்தப் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டினார்களோ, அந்தப் பிரதமரைச் சந்திக்க, மறுநாள் நேரம்  ஒதுக்கித்தர ஆளுரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
அநாவசியமாக பாஜகவினரின் உணர்ச்சிகளைத் தூண்டும் வேலையில்  திமுக ஈடுபட வேண்டாம். மு.க. ஸ்டாலின் பக்கத்தில், வீரமணியும், வைகோவும்  இருக்கும்வரை திமுக  வளராது. சோவியத்  ரஷியாபோல், இந்தியாவும் சிதறும் என பேசிய வைகோவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஐ.பி.எல். போட்டியைக் காண சென்றவர்களைத்  தாக்கிய கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய  வேண்டும்.  நதிநீர் அனைத்தும் தேசிய மயமானதுதான் என உச்சநீதிமன்றம் சொல்லட்டும், தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் செய்ய மோடி தயாராக இருக்கிறார். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியில் ரூ.8 லட்சம் கோடி முதல் ரூ.10 லட்சம் கோடி வரையிலான கோயில் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்றார்.
பேட்டியின் போது, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம், கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com