கூத்தாநல்லூரில் மின்மாற்றியில் புதிய பாகங்கள் பொருத்தம்

கூத்தாநல்லூர் துணை மின்நிலைய மின்மாற்றியில் ரூ. 50 ஆயிரம் மதிப்பில் புதிய பாகங்கள் பொருத்தும் பணி திங்கள்கிழமை  நடைபெற்றது.

கூத்தாநல்லூர் துணை மின்நிலைய மின்மாற்றியில் ரூ. 50 ஆயிரம் மதிப்பில் புதிய பாகங்கள் பொருத்தும் பணி திங்கள்கிழமை  நடைபெற்றது.
திருவாரூர் மின்மானி சோதனைக்கூட செயற்பொறியாளர் டி. காளிதாஸ் தலைமையிலும், உதவி செயற்பொறியாளர்கள் ஆர்.சி. நாகலிங்கம், டி.சி. அருள்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலையிலும் இப்பணி நடைபெற்றது. கூத்தாநல்லூர் உதவி செயற்பொறியாளர் எஸ். சங்கர்குமார், மின்மானி சோதனைக்கூட உதவி செயற்பொறியாளர்கள் ஆர். நாகலிங்கம், எம். அந்தோணிராஜ் உள்ளிட்டோர் இப்பணியை மேற்கொண்டனர்.
பின்னர், இதுகுறித்து மின்மானி சோதனைக் கூட செயற்பொறியாளர் டி. காளிதாஸ் கூறியது:
கூத்தாநல்லூர் துணை மின்நிலையத்தில் 8 டன் கொள்ளளவு கொண்ட மின்மாற்றியில் பழைய ஒயர்கள் உதிரி பாகங்கள் புதிதாக பொருத்தப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இதன்மூலம் கூத்தாநல்லூர், அத்திக்கடை, சேகரை, பொதக்குடி, அதங்குடி உள்ளிட்ட  கிராமங்களில் மின் விநியோகம் சீராக இருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com