சட்டிருட்டி வாய்க்கால் தூர்வாரும் பணி

மன்னார்குடி நகரின் முக்கிய வாய்க்காலான சட்டிருட்டி வாய்க்கால் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மன்னார்குடி நகரின் முக்கிய வாய்க்காலான சட்டிருட்டி வாய்க்கால் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
நகரின் முக்கிய வாய்க்காலாக சட்டிருட்டி வாய்க்கால் உள்ளது. மேட்டூர் அணை, கல்லணை ஆகியவற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து,  தற்போது மன்னார்குடியில் உள்ள பாணியாற்றில் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர், சட்டிருட்டி வாய்க்கால் வழியாக நகரில் உள்ள தாமரைக்குளம் உள்ள குளங்களுக்கு நீர் நிரப்படும். மேலும், மழைக் காலங்களில் இந்த வாய்க்கால் முக்கியமாக வடிகாலாகவும் இருந்து வருகிறது.
தற்போது, சட்டிருட்டி வாய்க்காலில் காட்டுச்செடிகள் மண்டி, புதர்போல் காட்சியளித்து வந்தது. இதை தூர்வார வேண்டும் என பல்வேறு அமைப்புகளின் சார்பில், நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையின் படி, ஸ்ரீ மாதா பவுண்டேசன் சமூக தொண்டு நிறுவனத்தின் சார்பில், தாமரைக்குளம் வடகரை பகுதியில் சட்டிருட்டி வாய்க்கால் தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இதை நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதன், தொண்டு நிறுவன அமைப்பாளர் நிரஜன் உமர்ஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com