எண்ணெய் எடுக்கும் பணியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: 200 பேர் கைது

திருவாரூர் அருகேயுள்ள கடம்பகுடியில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் அருகேயுள்ள கடம்பகுடியில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கடம்பகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்காக போலீஸ் பாதுகாப்புடன் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பணிகளை நிறுத்தக் கோரி மக்கள் அதிகாரம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட எட்டாம் வகுப்பு மாணவர் உள்ளிட்ட இருவருக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சனிக்கிழமை சுமுக பேச்சுவார்த்தை நடத்தலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டது. எனினும், போராட்டக் குழுவினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 72 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com