தியாகராஜர் கோயில் மகாலெட்சுமி சிலை உடையில் தீ

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் அம்மன் சன்னிதியில் உள்ள மகாலெட்சுமி சிலையின் உடையில் செவ்வாய்க்கிழமை இரவு தீப்பிடித்தது.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் அம்மன் சன்னிதியில் உள்ள மகாலெட்சுமி சிலையின் உடையில் செவ்வாய்க்கிழமை இரவு தீப்பிடித்தது.
திருவாரூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலின் உள் பிராகாரத்தில் மகாலெட்சுமி, தவக்கோலத்துடன் காணப்படுகிறார். மகாலெட்சுமிக்கு தினமும் பூஜைகளும், தீபாவளி தினத்தில் மட்டும் குபேர பூஜையின்போது அபிஷேகமும் நடைபெறும். மகாலெட்சுமியை கம்பிகள் வழியாக மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். மகாலெட்சுமி சன்னிதியின் உள்ளே செல்லும் வழி மற்றொரு பகுதியில் உள்ளது. அந்த வழியை கோயிலின் குருக்கள்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மகாலெட்சுமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த உடையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் தீப்பிடித்தது. சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள், இதுகுறித்து கோயில் ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த உடை அகற்றப்பட்டு, வேறு உடை அணிவிக்கப்பட்டது. அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து வந்த தீப்பொறி காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com