நாகநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கள்ளிக்குடி  ஸ்ரீநாகநாதசுவாமி கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கள்ளிக்குடி  ஸ்ரீநாகநாதசுவாமி கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
சிவராத்திரியையொட்டி இரவு நான்கு கால பூஜையில் சிவபெருமானுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து 108 சங்காபிஷேம் நடைபெற்றன. இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து சிவபாராயணம் செய்தனர்.
இதேபோல, கள்ளிக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. புதன்கிழமை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள்  கையில் கங்கணம் கட்டி விரதமிருந்து  ரயில்வே சாலை அருகில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் இருந்து பால் காவடி எடுத்து வந்து முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மாவிளக்கு, அர்ச்சனைகள், கிராம தேவதைகள் ஸ்ரீமுனீஸ்வரன், கழுவியான் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இரவு சுவாமிக்கு கரகம் கப்பரை எடுத்து வீதிஉலா நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எம். முருகையன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com