திருவாரூர் மாவட்டத்தில் பிப். 26 -இல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாளான பிப். 26 -ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கி குழந்தைகளின்

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாளான பிப். 26 -ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தை  மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) பிப். 26 -ஆம் தேதி அரசு,  அரசு உதவி பெறும் பள்ளிகள்,  தனியார் பள்ளிகள்,  அங்கன்வாடி மையங்கள்,  அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நலமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட சுமார் 3,18, 074 குழந்தைகள் பயன்பெறுவர். இதை சிறப்பாகச் செயல்படுத்த பொது சுகாதாரம்,  பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.
1 முதல் 5 வயதுக்குள்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படும். 1 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளில் வழங்கப்படும். 19 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை  அளவு அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயதுக்குள்பட்டவர்களுக்கு ஒரு மாத்திரை அளவு வழங்கப்படும். அல்பெண்டசோல் மாத்திரையை நன்றாகச் சப்பி சாப்பிட வேண்டும். குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் மாத்திரை வழங்கக்கூடாது.
தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுபட்ட குழந்தைகளுக்கு மார்ச் 1 -ஆம் தேதி மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடற்புழு நீக்கம் குழந்தைகளுக்கு ரத்த சோகையைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்பட்டு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. குழந்தைகள் நாள்தோறும் அங்கன்வாடி மையத்துக்கும்,  பள்ளி மற்றும் கல்லூரிக்கும் வருவது அதிகரிக்கிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com