காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரிக்கை

ஈரோட்டில் நடைபெறும் திமுக மாநாட்டில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் நடைபெறும் திமுக மாநாட்டில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் திமுக நகர அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார்.
தீர்மானங்கள்: திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்ததை வலியுறுத்தி பிப்.27-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்பது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ஈரோட்டில் நடைபெறும் திமுக மாநாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்ற திமுக செயல் தலைவருக்கு வேண்டுகோள் விடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com