நேதாஜி மகளிர் கல்லூரியில் தமிழ் பயிலரங்கம்

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் "தமிழ் தரும் வாழ்வு' எனும் தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் "தமிழ் தரும் வாழ்வு' எனும் தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
பயிலரங்கை கல்லூரியின் ஆலோசகர் மா. அருணாச்சலம் தொடங்கி வைத்தார்.
இதில் "மொழியும் வாழ்வும்' எனும் முதல் அமர்வில் பாவலர் த.ரெ. தமிழ்மணி, தமிழாசிரியர் கோமல் தமிழமுதன் ஆகியோர் பேசினர். "இலக்கியமும் வாழ்வும்' எனும் இரண்டாம் அமர்வில் பாவலர் கலை பாரதி, தமிழாசிரியை இரெ.சண்முகவள்ளி ஆகியோர் பேசினர். பயிலரங்கில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் தெ. வெற்றிச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். "வாழ்வு தரும் தமிழ்' எனும் தலைப்பில் இரண்டாம் நாள் அமர்வு நடைபெற்றது.
இதில் "தமிழ் தந்த வாழ்வு' எனும் தலைப்பில் நடை பெற்ற நிகழ்வில் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க. மகேஸ்வரி, இரா. ஆனந்தி, சா. பாத்திமா, க. சரிதா, சி. சரண்யா, அ. கலையரசி மற்றும் மாணவிகள் கட்டுரை வாசித்தனர். தமிழ்த் துறைத் தலைவர் இரா. அறிவழகன் பயிலரங்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com