மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 -ஆவது பிறந்த நாள் விழா திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 -ஆவது பிறந்த நாள் விழா திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூரில் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நாகை மக்களவை உறுப்பினர் கே. கோபால் தலைமை வகித்தார்.
இதில், நகர அதிமுக செயலர் ஆர்.டி. மூர்த்தி, ஒன்றியச் செயலர் பி.கே.யு. மணிகண்டன், மாவட்டப் பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், ஜெ. பேரவை நகரச் செயலர் எஸ். கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, அன்னதானம் வழங்கப்பட்டது.
நீடாமங்கலத்தில்...
வலங்கைமானில் நகர அதிமுக செயலர் சா. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாள் விழாவில், 70 பெண்களுக்கு சேலை, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயபால், மாவட்ட மாணவரணிச் செயலர் ஜெய. இளங்கோவன், அவைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com