இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பொங்கல் விழா

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிரியேட்- நமது நெல்லை காப்போம் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிரியேட்- நமது நெல்லை காப்போம் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  
விழாவில், நமது நெல்லை காப்போம் ஒருங்கிணைப்பாளர் நெல்.ஜெயராமன் பேசியது: நிகழாண்டு வெள்ளமும், வறட்சியும் விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் சாகுபடி வெள்ளத்திலும், வறட்சிலும் பாதிப்பின்றி அறுவடைக்கு தயாராகியுள்ளது. ஒவ்வொரு ரகமும் குறைந்தது ஒரு ஏக்கரில் 28 மூட்டை வரை மகசூல் எதிர்பார்க்கப்படுகிரது. மேலும் கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல் ஒட்டு ரகத்தை விட பாரம்பரிய நெல் பயிரில் நான்கு மடங்கு அதிகமாக கிடைக்கும் என்றார்.
முன்னதாக, வியாழக்கிழமை ஆராய்ச்சி மையத்தில் கில்ரியேட் மேனேஜிங் டிரஸ்டி ஆர். பொன்னம்பலம் அறுவடை பணியை தொடக்கி வைத்துப் பேசியது: பொங்கல் விழாவின்போது உழவர்கள் அறுவடை திருவிழா நடத்தி பொங்கலுக்கு புதுஅரிசியை பயன்படுத்துவது காலங்காலமாக நம்மிடையே இருந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக பொங்கல் வைக்க பை அரிசியை வாங்குகிறோம். அந்த நிலை மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தொடு அறுவடை செய்து அந்த நெல்லை குத்தி புதுஅரிசி எடுத்து விவசாயிகள் தொழிலாளர்களின் பங்களிப்போடு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
நெல் என்பது உணவுப் பொருள் மட்டுமல்ல, நம்முடைய கலாசாரம், பண்பாடு இவைகளை பிரதிபலிக்கக்கூடியது. நம்முடைய இல்லங்களில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முக்கியத்துவம் கொண்டது நெல்லும் அரிசியும். அதை போற்றும் வகையிலும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com