மகளிர் கல்லூரி என்எஸ்எஸ் முகாம்

மன்னார்குடி அருகேயுள்ள பைங்காநாடு கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

மன்னார்குடி அருகேயுள்ள பைங்காநாடு கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து, பைங்காநாடு கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தூய்மைக்காக இளைஞர்கள் என்னும் சிறப்பு முகாம் திட்டத்தின்கீழ், பைங்காடு அருள்மிகு சபாபதீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கு. சீனிவாசன் தலைமை வகித்தார். 
 கல்லூரித் தாளாளர் வி. திவாகரன் தொடங்கி வைத்தார்.
இதில், இக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவியர் கோயில் வளாகத்தில் உழவாரப் பணியும், மரக் கன்றுகளை நட்டனர். விழாவை வாழ்த்தி, கல்லூரி முதல்வர் சீ. அமுதா, மன்னார்குடி நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், கூட்டுறவு சங்க முன்னாள் செயலர் க. மலர்வேந்தன், ஊராட்சி முன்னாள் தலைவர் க. அசோகன், கல்லூரி அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜதுரை, இயற்பியல்துறை பேராசிரியர் எஸ். மாலினி, என்எஸ்எஸ் அலுவவலர் எஸ். கலாதேவி, ஒருங்கிணைப்பாளர் எஸ். உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com