நியாயவிலைக் கடை திறப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், புதிதாக நியாயவிலைக் கடையை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், புதிதாக நியாயவிலைக் கடையை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
பொதக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். நாகை மக்களவை உறுப்பினர் கே. கோபால் முன்னிலை வகித்தார். நியாயவிலைக் கடையை அமைச்சர் ஆர். காமராஜ்  திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி வழங்கினார்.
நிகழ்ச்சியில், அவர் பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் மூலம் 579 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 142 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், 3,46,291 குடும்ப அட்டைதாரர்கள், நியாயவிலைக் கடைகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர் என்றார். 
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, கூட்டுறவு சங்கங்களின் மேலாண் இயக்குநர் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com