மன்னார்குடியில் இன்று தமிழர்  வரலாற்றுத் தொன்மை கருத்தரங்கம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில், தமிழர் வரலாற்றுத் தொன்மை கருத்தரங்கம் சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில், தமிழர் வரலாற்றுத் தொன்மை கருத்தரங்கம் சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.
மன்னார்குடி காந்திஜி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அமைப்பின் செயலர் ந.மு. தமிழ்மணி தலைமை வகிக்கிறார்.
இதில், காலையில் நடைபெறும் அமர்வில், "கீழடி அகழ்வாய்வு; வைகைக் கரை நாகரிகம்' என்ற தலைப்பில் கி. அமர்நாத் இராமகிருஷ்ணன் பேசுகிறார். இதேபோல், "வரலாற்றில் பூம்புகார்' என்ற தலைப்பில் பேராசிரியர் ந. அதியமான் பேசுகிறார். மாலையில் நடைபெறும் அமர்வில், "அரிக்கமேடும், தமிழக- அயலகத் தொடர்புகளும்'  என்ற தலைப்பில் பேராசிரியர் வீ. செல்வக்குமாரும்,  "அகழ்வாய்வுகளின் அடிப்படையில் தமிழர் நாகரிகத்தின் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற தலைப்பில் தி. சுப்பிரமணியன் ஆகியோரும் பேசுகின்றனர்.
நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com