இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் மகன் மீது தாக்குதல்: ஒன்றியச் செயலாளரின் மகன்கள் மீது வழக்குப்பதிவு

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மகனை தாக்கியதாக அதே கட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளரின்

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மகனை தாக்கியதாக அதே கட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளரின் இரு மகன்கள் உள்பட  ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒரத்தூரைச் சேர்ந்தவர் சந்துரு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர். இவரது மகன் சரண்ராஜ்(24). இவர் திங்கள்கிழமை இரவு மோதிலால் நேரு தெருவில் உள்ள முடிதிருத்தகத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அதேசமயம், ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளருமான நடேச. தமிழார்வனின் மகன்கள் வக்கீல் தமிழ்ஸ்டாலின் பாரதி, இளந்தமிழன் மற்றும் அவரது நண்பர்கள் அதே கடைக்கு வந்தார்களாம். ஏற்கனவே தமிழ்ஸ்டாலின் பாரதிக்கும், சரண்ராஜீக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. முடிதிருத்தும் கடையில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் தமிழ்ஸ்டாலின் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரண்ராஜை தாக்கினார்களாம். மேலும் சரண்ராஜின் தங்கசெயின், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காணவில்லையாம்.
இதில் படுகாயமடைந்த சரண்ராஜ், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, உதவி ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி, தமிழ் ஸ்டாலின் பாரதி, இளந்தமிழன், பாண்டி, இளையராஜா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஒரு வழக்கு: இதேபோல், முடிதிருத்தும் கடையில் வைத்து சரண்ராஜ் தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் சேர்ந்து தன்னை தாக்கி, தனது தங்கசெயினை பறித்ததாக இளந்தமிழன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com