நல்லிக்கோட்டையில் மீன் குஞ்சு வளர்ப்பு மையம் திறப்பு

திருவாரூர் மாவட்டம், நல்லிக்கோட்டையில் மீன் குஞ்சு வளர்ப்பு மையமும், ஜாம்பவானோடையில் மீன்பிடி இறங்குதளமும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம், நல்லிக்கோட்டையில் மீன் குஞ்சு வளர்ப்பு மையமும், ஜாம்பவானோடையில் மீன்பிடி இறங்குதளமும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
நல்லிக்கோட்டையில் ரூ. 2.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மீன் குஞ்சு வளர்ப்பு  மையம், ஜாம்பவானோடையில் ரூ.1.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதளம் ஆகியவற்றை  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் இவற்றை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்கவும்,  மீனவர்களின் நலனுக்காகவும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக,  ரூ.2.18 கோடி மதிப்பில் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி  நிதியுதவியுடன்  நல்லிக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மீன் குஞ்சு வளர்ப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மாவட்ட மக்களின் மீன் குஞ்சு தேவைகள் நிறைவேற்றப்படும்.
இதேபோல், ஜாம்பவானோடையில் தரமான மீன்களை வழங்கும் வகையிலும், சுகாதாரமான முறையில் கையாளவும் மற்றும் பதப்படுத்தவும் பல்வேறு வசதிகளுடன் கூடிய மீன்பிடி இறங்கு தளமானது, ரூ.1.13 கோடி மதிப்பில் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி  நிதியுதவியுடன் (நபார்டு) கட்டப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் வாயிலாக மீன்பிடி தொழில் மற்றும் அதனை சார்ந்த பிறத் தொழில்கள் முன்னேற்றம் அடைய வழிவகை ஏற்படுவதோடு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அந்நிய செலவாணி வாயிலாக அரசுக்கு கூடுதல் வருமானம்  கிடைக்கப்பெறும் என்றார்.
 நிகழ்வில் மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் செல்வசுரபி, மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் இராமநாதன், உதவி இயக்குநர் (மீன்வளம்) ஜெயராஜ், வட்டாட்சியர் ஸ்ரீதேவி சிவானந்தம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ. அரிகிருஷ்ணன், மீன்துறை சார் ஆய்வாளர் ரெங்கநாதன் ஆகியோர்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com