கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பைங்காட்டூரில் கால்நடைதுறையின் சார்பில், தீவிர கோமாரி

மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பைங்காட்டூரில் கால்நடைதுறையின் சார்பில், தீவிர கோமாரி நோயைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கால்நடை உதவி மருத்துவர்கள் விஷ்வேந்தர், செந்தில்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில் பைங்காட்டூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்போர் முகாமுக்கு கொண்டு வந்த 850 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டதுடன், நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை பாதுகாப்பது பற்றியும்,நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்க வேண்டிய முறைகள் குறித்தும் விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பாரதிமோகன், ராஜேஸ்வரி, கால்நடை ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com