விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலை: மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா

விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலை: மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா

தமிழக விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என தில்லியில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மாநாட்டில் வலியுறுத்தியதாக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
தில்லியில் கடந்த 10, 11-ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநாட்டில் நான் பேசியபோது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து, தமிழகத்துக்கு தேவையான தண்ணீரைப் பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். நெல், கரும்புப் போன்ற ஒரு சில விளைபொருள்களுக்கு மட்டுமல்லாது, விவசாயிகள் உற்பத்திச் செய்யும் அனைத்து விளை பொருள்களுக்கும் நியாயமான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்கி, விவசாயத்துக்கு வலுசேர்க்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக்கடன் வழங்க மாணவர்களின் பெற்றோரிடம் சொத்துக்களை அடமானமாகக் கேட்பது கண்டிக்கத்தக்கது.
தேசிய அளவில் தொழிற்பயிற்சிக்கான வேலைவாய்ப்பு 70 லட்சமாக இருக்கும் நிலையில், ஆண்டுக்கு 18 லட்சம் பேர் மட்டுமே தொழிற்பயிற்சி முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் போதியளவு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாதது தான். ஆகையால், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் மாலை நேரம் அரசு தொழிற்பயிற்சி மையங்களை செயல்படுத்தி, கிராமப்புற இளைஞர்கள் தொழிற்கல்வி பயில வாய்ப்பளிக்க வேண்டும்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் தேசிய அளவில் அனைத்துக் குறியீடுகளிலும் தென்மாநிலங்கள் முன்னிலையில் வகிப்பது தெரியவந்தது. இது ஹிந்தி திணிப்பு அனைத்து வகையிலும் தேவையற்றது என்று மத்திய அரசே ஒப்புதல் அளிப்பது போல் இருக்கிறது என சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com