பாலியல் புகார்: அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் குழுக்கள் அமைக்கக் கோரிக்கை

அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் புகார் குறித்து விசாரித்து நீதி வழங்கும் வகையில், சிறப்புக் குழுக்களை தமிழக அரசு அமைக்க வேண்டும் என, ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் புகார் குறித்து விசாரித்து நீதி வழங்கும் வகையில், சிறப்புக் குழுக்களை தமிழக அரசு அமைக்க வேண்டும் என, ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் மாவட்டச் செயலர் பா. கோமதி தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் என். அமிர்தம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் ஜி. கலைச்செல்வி, மாவட்ட துணைத் தலைவர் கே. தமிழ்செல்வி, துணைச் செயலர் ஆர். சுபா, மாவட்டப் பொருளாளர் எஸ். தேவிகா, நகரச் செயலர் சி. காமாட்சி உள்ளிட்டோர் பேசினர்.
இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: கிராமப்புற பெண்களுக்கு புதிய வேலைத் திட்டங்களை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள11,000 செவிலியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். மகளிர் காவல் நிலைய செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் புகார் குறித்து விசாரித்து நீதி வழங்கும் வகையில், சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com