ஆழித்தேரோட்டத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்'

திருவாரூரில் நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டத்து அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.

திருவாரூரில் நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டத்து அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
ஆழித்தேரோட்டத்தையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு அவர் கூறியது: உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் மே 27-ஆம் தேதி காலை 6 முதல் 7 மணிக்குள் வடம் பிடிக்கப்பட்டு தொடங்கவுள்ளது. இதையொட்டி, தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு முன்னேற்பாடு கூட்டங்கள் நடத்தப்பட்டு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, நகராட்சி மூலம் 50 துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து துப்புரவுப் பணி மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேருக்கு முன்னும் பின்னும் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நான்கு வீதிகளிலும் 7 தற்காலிக குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தேரோடும் வீதியில் 2 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.
தேரோட்டத்தின்போது, 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை மூலம் 3 அவரச ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேரோடும் வீதிகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 2 உதவியாளர்கள் அடங்கிய 4 மருத்துவ குழுக்களும், தேருக்கு பின்னால் 2 மருத்துவ குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேரோட்டத்துக்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டம் சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் நிர்மல்ராஜ். ஆய்வின்போது, மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் உடனிருந்தார்.
முன்னதாக, ஆழித்தேர் வடிவமைப்பு, தேரின் சக்கரம் மற்றும் தேர்ச் சக்கர முட்டுக்கட்டை வடிவமைக்கும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து, நான்கு வீதிகளிலும் தேர் சுற்றிவர ஏதுவாக மரக்கிளைகள், மின்சார கம்பிகள், தொலைபேசி இணைப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com