நூறு நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்க நினைக்கிறது'

நூறு நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்க நினைக்கிறது என்றார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்க நினைக்கிறது என்றார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர்.
இதுதொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது:
விவசாயம் என்பது இந்தியாவின் முன்னணி தொழில் என்ற நிலை ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டு, தற்போது மிகவும் நலிந்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடும், விவசாயிகளுக்கான நிவாரணமும் அரசுகளால் குறைத்து வழங்கப்படுகின்றன. விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நவீன மயத்தின் காரணமாகவும், அரசின் கொள்கைகள் காரணமாகவும் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 800 ஏக்கர் விவசாயம் செய்யாத நிலப்பரப்பாக மாறியுள்ளது.
இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் 2006-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் தனிச்சட்டமாக உருவாக்கப்பட்டது. இதன்படி, வறட்சி காலங்களில் 100 நாட்கள் என்பது 150 நாள்கள் வரை வேலை தர வேண்டும் என்பது விதி. ஆனால், இதுவரை இது அமல்படுத்தப்படவில்லை.
ஜன.5-ஆம் தேதி 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு சுமார் 1,000 விற்பனை மையங்களை தலா ரூ.60 லட்சம் செலவில் கட்டுவது எனவும், அதற்காக ரூ.600 கோடியை 100 நாள் வேலைத் திட்ட நிதியில் இருந்து திருப்பி விடுவது எனவும் அறிவித்தது.
உண்மையில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை 90 சதவீதம் மனித உழைப்புக்கும், 10 சதவீதத்தை உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்குமே பயன்படுத்த வேண்டும். மாறாக 51 சதவீதத்தைக் கூலிக்காகவும், 49 சதவீதத்தை நிர்வாகச் செலவுக்காகவும் என தமிழக அரசு முடிவெடுத்திருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும். மேலும் 93 சதவீதம் கட்டுமானப் பணிகளுக்கும், 7 சதவீதம் மட்டும் கூலிக்கு என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com