திருத்துறைப்பூண்டியில் 42 இடங்களில் நிவாரண முகாம்

கஜா புயல் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் 42 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் 42 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கஜா புயலால் பாதிக்கப்படுபவர்களை மீட்கவும், அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் வருவாய்த் துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் ஒருங்கிணைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தியுள்ளனர்.
தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், கரையங்காடு, இடும்பவனம், தில்லைவிளாகம், ஜாம்பவானோடை, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 42 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், தில்லைவிளாகம், கல்லடிக்கொல்லை, கரையங்காடு பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட வழங்கல் அலுவலர் சேகர், வருவாய்க் கோட்டாட்சியர் பத்மாவதி, வட்டாட்சியர் கே.மகேஷ்குமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் முத்துப்பேட்டை பகுதியில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இனிக்கோதிவ்யன், கமால்பாட்சா ஆகியோர் முத்துப்பேட்டை பகுதியில் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினருடன் முகாமிட்டுள்ளனர். 
மீட்புப் பணிகளுக்குத் தேவையான படகுகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி பகுதியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொ) ஜான்விக்டர் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com