வணிகவியல் மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, நாட்டு நலப் பணித் திட்டம், மன்னார்குடி ரோட்டரி சங்கம், கூத்தாநல்லூர் கிளை

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, நாட்டு நலப் பணித் திட்டம், மன்னார்குடி ரோட்டரி சங்கம், கூத்தாநல்லூர் கிளை நூலகம் இணைந்து வணிகவியல் மாணவர்களுக்கான மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சிறப்பு கருத்தரங்கை மன்னார்குடி கிளை நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின.
நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி ரோட்டரி சங்கத் தலைவர் டி. ஜெயக்குமார் தலைமை வகித்தார். கருத்தரங்கை, என்.எஸ்.எஸ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். ராஜப்பா தொடங்கி வைத்தார். இதில் வேலைவாய்ப்பு குறித்து நிதி ஆலோசகரும், பயிற்சியாளருமான வி. வினோத்தும், உயர் கல்வி குறித்து நிதி ஆலோசகர் என். சாந்தகுமார், ரோட்டரி முன்னாள் தலைவர் எஸ்.கே. ரெத்னசபாபதியும் விளக்கமளித்தனர்.  மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி, தேசிய மேல்நிலைப் பள்ளி, தரணி மெட்ரிக் பள்ளி, சண்முகா மெட்ரிக் பள்ளி, பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி, தேவி மெட்ரிக் பள்ளி எஸ்.பி.ஏ. மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த வணிகவியல் பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் என். அய்யாதுரை, துரைராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கச் செயலர் எம். முகம்மது சுல்தான், கூத்தாநல்லூர் கிளை நூலகர் டி. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com