"திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களால் அதிக மகசூல் பெறலாம்'

திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, அதிக மகசூல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, அதிக மகசூல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் 3லட்சத்து 75 ஆயிரத்து 775 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. திருந்திய நெல் சாகுபடி செய்வதன் மூலம் விதையின் அளவு மற்றும் நீரின் அளவு குறைக்கப்படுகிறது. 
தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் அல்லது வீரிய ஒட்டு ரகங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதைகள் பொதுமானதாகும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது அசோஸ்பைரில்லம் (200 கிராம்) அல்லது பாஸ்போ பாக்டீரியம் உயிர் உரத்துடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்) நாற்றாங்கால் போதுமானது. 
 நடவு வயலை துல்லியமாக சமன் செய்து தயாரித்து பின்பு இளம் வயது (14 நாள்கள்) நாற்றுக்களைப் பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். ஒரு குத்துக்கு ஒரு நாற்று என்ற அளவில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 15- ஆம் நாளில் கருவி (கோனோரீடர்) மூலம் களைகளை சேற்றில் அமுக்கி விட வேண்டும். இதனால், மண்ணில் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு, வேரின் வளர்ச்சி மிகுந்து தூர்கட்டும் திறன் கூடுகிறது. 
நெல் வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்ச வேண்டும். இதனால் முப்பது முதல் நாற்பது சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மூலம் சரசாரியாக 6 முதல் 7.5 டன் வரை கூடுதலாக மகசூல் பெற முடியும். மகசூல் இயல்பான சாகுபடி முறையில் கிடைக்கும் மகசூலை விட 50 சதவீதம் வரை கூடுதலாக கிடைக்கும். இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம். 
இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற. தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com