சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தரக் கோரி சாலை மறியல்

திருவாரூர் மாவட்டத்தில் காய்ந்து வரும் சம்பா பயிர்களைக் காக்க உடனடியாக தண்ணீர் வழங்கக்கோரி, சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டத்தில் காய்ந்து வரும் சம்பா பயிர்களைக் காக்க உடனடியாக தண்ணீர் வழங்கக்கோரி, சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது. இதனால், சம்பா பயிர்களைக் காக்க தண்ணீர் தரக்கோரி, மாவட்டத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, திருவாரூர் அருகே உள்ள ஆண்டிபந்தல் கடைவீதியில் விவசாயிகளும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி... இதேபோல், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
முத்துப்பேட்டை... மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் உள்ள கோவிலூர் கோட்டகம் ஓஎன்ஜிசி சாலை அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோவிலூர் ரவி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக, அமமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர்.
தட்டாங்கோவில்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒன்றியச் செயலாளர் கே. மாரிமுத்து தலைமையில், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் உள்ள தட்டாங்கோவிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்... மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் உள்ள திருப்பத்தூர் கடைவீதியில், திமுக கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பால. ஞானவேல் தலைமையில், விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை வெண்ணாறு உபகோட்டப் பொறியாளர் கண்ணையன், திருத்துறைப்பூண்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் இனிக்கோ திவ்யன் ஆகியோர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய, கலைந்துபோகச் செய்தனர். இதனால், சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com