"அரசியல் அமைப்புச் சட்டப்படி மக்களுக்கு உரிமைகள் கிடைப்பது அவசியம்'

அரசியல் அமைப்புச் சட்டப்படி மக்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனிராஜா வலியுறுத்தினார்.

அரசியல் அமைப்புச் சட்டப்படி மக்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனிராஜா வலியுறுத்தினார்.
திருவாரூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பிரசாரப் பயணக்குழுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆனிராஜா பேசியது: 
கன்னியாகுமரியில் செப்.22- ஆம் தேதி இந்த பிரசாரப் பயணம் தொடங்கியது. இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இளைஞர்கள் வேலை இல்லாமல் துன்பப்படுகின்றனர். பெண்களுக்குப் பாலியல் தொல்லை அதிகரித்து விட்டது. நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. 
  இந்திய அரசியல் சாசன சட்டத்தில், இந்தியாஅனைவருக்குமான தேசம் என்பதை வலியுறுத்துகிறது. இந்தியக் குடிமகன்களுக்கு உரிய உரிமைகள் பற்றி கூறுகிறது. ஆனால், மத்திய அரசு இவற்றை கடைப்பிடிக்கவில்லை. 
எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவும், வன்முறையற்ற இந்தியாவை உருவாக்கவும் இந்திய அளவில் பெண்களின் பிரசாரப் பயணம், 5 இடங்களில் இருந்து தொடங்கி அக்.15-இல் தில்லியில் பொதுக் கூட்டத்துடன் நிறைவடைகிறது என்றார்.
 நிகழ்ச்சிக்கு சம்மேளனத்தின் நகரச் செயலாளர் கே. அன்னபாக்கியம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வி. மகாலெட்சுமி முன்னிலை வகித்தார். 
தேசிய செயலாளர் நிஷாசித்து, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான பி. பத்மாவதி, தேசியக்குழு உறுப்பினர் மாலா பாண்டியன், மாவட்டச் செயலாளர் எஸ். தமயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com