"உலக விண்வெளி வார போட்டி: அக். 1-க்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்'

உலக விண்வெளி வாரத்தையொட்டி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் கட்டுரை போட்டிகளுக்கு

உலக விண்வெளி வாரத்தையொட்டி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் கட்டுரை போட்டிகளுக்கு அக். 1 -ஆம் தேதிக்குள் கட்டுரைகளை மாணவ, மாணவிகள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பொது மேலாளர் ஏ. நாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகேந்திரகியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அக். 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்.
நிகழாண்டு கட்டுரைப் போட்டியின் தலைப்புகளாக தமிழ் மொழிக்கு  6 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை விண்வெளிச் சுற்றுலா, 10, 11, 12 -ஆம் வகுப்புகளுக்கு வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு என்ற தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழிக்கு 6 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை ள்ல்ஹஸ்ரீங் ற்ர்ன்ழ்ண்ள்ம், 10, 11, 12  -ஆம் வகுப்புகளுக்கு ன்ய்ண்ற்ங்க் ஸ்ரீர்ப்ர்ய்ஹ் ண்ய் ர்ற்ட்ங்ழ் ல்ப்ஹய்ங்ற் என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ, மாணவிகளின் கையெழுத்தில் ஏ4 அளவு தாளில் 2,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இந்த கட்டுரை தங்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து ஒப்புதல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைகள் அக். 1 -ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ,T‌h‌e A‌d‌m‌i‌n‌i‌s‌t‌r​a‌t‌i‌v‌e ‌o‌f‌f‌i​c‌e‌r, IS​RO PR​O​P​U​L​S​I​ON CO​M​P​L​EX, Ma‌h‌e‌n‌d‌r​a‌g‌i‌r‌i P.O, T‌i‌r‌u‌n‌e‌l‌v‌e‌l‌i D‌t, 627133  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல் கட்டுரைப்போட்டி என்று குறிப்பிடப்பட வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு அக்டோபர்  மாதம் மகேந்திரகிரியில் நடைபெறும் உலக விண்வெளி வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும். 
மேலும் விவரங்களுக்கு 04637 - 281210, 281940, 281230 என்ற தொலைபேசியிலும், 9442140183, 9486041737, 9443455411 என்ற செல்லிடப்பேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com