ரூ.200 கோடியில் யமுனை கரையோரத்தை மேம்படுத்தும் திட்டம்: நவம்பர் 2 இல் கேஜரிவால் தொடக்கம்

தில்லியில் ரூ.200 கோடி செலவில் யமுனை கரையோரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நவம்பர் 2-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
ரூ.200 கோடியில் யமுனை கரையோரத்தை மேம்படுத்தும் திட்டம்: நவம்பர் 2 இல் கேஜரிவால் தொடக்கம்

தில்லியில் ரூ.200 கோடி செலவில் யமுனை கரையோரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நவம்பர் 2-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தில்லி சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வாஜிராபாதில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு யமுனை கரையை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த தில்லி அரசுக்கு தில்லி வளர்ச்சி ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.200 கோடி செலவில் 3 கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
கான்கிரீட் பொருள்களையோ, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களையோ பயன்படுத்தாமல், மூங்கில்கள், மரக் கட்டைகளைக் கொண்டு யமுனைக் கரையோரம் அழகுபடுத்தப்படும்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
யமுனை கரையையொட்டி பசுமை வழித்தடங்கள் ஏற்படுத்துவதுடன், மூலிகை பூங்காக்கள் அமைக்கப்படும். அதுமட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு சேவையும் இயக்கப்படும்.
இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அடுத்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். சோனியா விஹார் படித்துறையில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முதல்கட்ட பணிகள் அடுத்த ஆண்டு ஜூனில் முடியும். ஒன்றரை ஆண்டில் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் என்றார் என்றார் கபில் மிஸ்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com