அஜய் மாக்கனுக்கு இது சோதனையான தேர்தல்

நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி தேர்தல், தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கனுக்கு சோதனையான தேர்தல் என்று தில்லியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா

நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி தேர்தல், தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கனுக்கு சோதனையான தேர்தல் என்று தில்லியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ள முன்னாள் அமைச்சர் அரவிந்தர் சிங், ஒரு சந்தர்ப்பவாதி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தில்லி மாநகராட்சி தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் ஷீலா தீட்சித் கூறியதாவது:
தில்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றால், அஜய் மாக்கனுக்கு எதிராக கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை ஆகிவிடும்.
எனவே, மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருப்போம். அப்போதுதான் நாம் நினைப்பது தவறா அல்லது சரியா என்பது தெரியவரும். ஆகையால் இந்தத் தேர்தல் அஜய் மாக்கனுக்கு சோதனையான தேர்தலாகும்.
தனிப்பட்ட லாபம் அடைவதற்காகவே அரவிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார். அரவிந்தர் சிங் ஒரு சந்தர்ப்பவாதி. தில்லி காங்கிரஸின் தலைவராகவும், தில்லி அமைச்சராகவும் அரவிந்தர் சிங் பதவி வகிக்துள்ளார். அவருக்கு தேவையான அனைத்தையும் காங்கிரஸ் கட்சி வழங்கியது. ஆனால் அவர் பொறுமை காக்காமல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார் என்றார் ஷீலா தீட்சித்.
தில்லி முதல்வராக மூன்று முறை தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருந்த ஷீலா தீட்சித்தை மாநகராட்சி தேர்தலில் பிரசாரம் செய்யும் முக்கிய தலைவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அஜய் மாக்கன், மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்குமாறு ஷிலா தீட்சித்துக்கு தான் கடிதம் எழுதியதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஷீலா தீட்சித் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் முனைப்பு காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com