சுட்டுரையில் பாலியல் துன்புறுத்தல்: ஷாஜியா இல்மி புகார் மீது காவல்துறை வழக்குப் பதிவு

சுட்டுரையில் (டுவிட்டர்) பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, தில்லி பாஜக துணைத் தலைவர் ஷாஜியா இல்மி காவல்துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு

சுட்டுரையில் (டுவிட்டர்) பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, தில்லி பாஜக துணைத் தலைவர் ஷாஜியா இல்மி காவல்துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் தொடர்புடைய பாலியல் விடியோ வெளியானதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சந்தீப் குமாரைக் குறிப்பிட்டு ஆம் ஆத்மி அரசை விமர்சிக்கும் வகையில் ஷாஜியா இல்மி தனது சுட்டுரைப் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரது அந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மர்ம நபர்கள் சிலர் தவறான வார்த்தைகளில் ஷாஜியா இல்மிக்கு பதிலளித்திருந்தனர்.
இதையடுத்து, சமூக வலைதளத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி ஷாஜியா இல்மி காவல்துறையில் புகார் அளித்தார்.
அவரது அந்தப் புகார் குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஷாஜியா இல்மி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.
இந்நிலையில், காவல்துறையில் புகார் அளித்ததன் பிறகு ஷாஜியா இல்மி இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஆம் ஆத்மி கட்சியினரால் அளிக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி ஆதரவாளர்கள் வெளிப்படுத்தும் இழிவான நடவடிக்கைகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
பெண்களுக்கு மதிப்பளியுங்கள். சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த சுட்டுரைக் கணக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் காவல்துறையினர் அந்த குற்றவாளிகளை பிடித்துவிடுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com