தில்லி பல்கலை. ஆசிரியர்கள் பேரணி: காலி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தில்லி பல்கலைக்கழகத்தில் நீடித்து வரும் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி அதில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள்,

தில்லி பல்கலைக்கழகத்தில் நீடித்து வரும் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி அதில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், மாணவர்கள் சனிக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தில்லி பல்கலை. ஆசிரியர்கள் சங்கம், தில்லி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம், தில்லி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் பரிசோதனைக் கூட அலுவலர்கள் சங்கம், தில்லி பல்கலைக்கழக கலைத்துறையில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் சனிக்கிழமை அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தில்லியில் உள்ள சில கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி அவற்றை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிக்கக் கூடாது. நீண்ட காலமாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் சேவையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு முறையை சரியாகப் பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள சம்பவளத்தை வழங்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு அளித்த அறிக்கையின்படி ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சில பேராசிரியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பேரணியில் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com