தில்லியில் திடீர் புழுதிப் புயல்!

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், தலைநகரில் சனிக்கிழமை புழுதிப் புயல் வீசியதுடன் லேசான மழையும் பெய்தது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், தலைநகரில் சனிக்கிழமை புழுதிப் புயல் வீசியதுடன் லேசான மழையும் பெய்தது.
இதுகுறித்து தில்லி வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
தலைநகரில் மாலையில் மணிக்கு சுமார் 39 கி.மீ. வேகத்தில் புழுதிப் புயல் வீசியதாக சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையப் பகுதியில் பதிவாகியது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சீசன் சராசரியை விட 1 டிகிரி அதிகமாக, 39.2 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை சீசன் சராசரியை விட 6 டிகிரி அதிகமாக, 29 டிகிரி செல்ஷியஸாக பதிவானது.
ரிட்ஜ் மற்றும் அயாநகர் பகுதியில் லேசான மழை பெய்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. பாலம் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.4 டிகிரி செல்ஷியஸும், லோதி சாலையில் 39.2 டிகிரி செல்ஷியஸும், ரிட்ஜ் பகுதியில் 39.7 டிகிரி செல்ஷியஸும், அயாநகரில் 40 டிகிரி செல்ஷியஸும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 64 முதல் 39 சதவீதம் வரையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com