வழிப்பறியைத் தடுக்க முயன்ற மணிப்புரி பெண் காயம்

தெற்கு தில்லி ஹவுஸ் காஸ் பகுதியில் ஆட்டோவில் சென்ற மணிப்புரி பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். அப்போது ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த அவர்

தெற்கு தில்லி ஹவுஸ் காஸ் பகுதியில் ஆட்டோவில் சென்ற மணிப்புரி பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். அப்போது ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த அவர் மோட்டார்சைக்களில் சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதுடைய அப்பெண் கனாட் பிளேஸுக்கு செல்வதற்காக ஹவுஸ் காஸ் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோவில் பயணம் செய்தார்.
ஆட்டோ, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரம் சென்றதும் மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அப்பெண்ணின் பையை பறிக்க முயன்றனர். அதை அவர் தடுக்க முயன்ற போது, ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததும் மோட்டார்சைக்கிளில் சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அப்பெண்ணின் பையை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பினர்.
இதில் கை, காலில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com