தில்லியில் மின் வாகனங்கள் விற்பனை குறைந்தது:ஆய்வில் தகவல்

 தலைநகர் தில்லியில் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் (இ-வெஹிகில்ஸ்)  விற்பனை குறைந்திருப்பது களஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

 தலைநகர் தில்லியில் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் (இ-வெஹிகில்ஸ்)  விற்பனை குறைந்திருப்பது களஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அண்மையில் தொழில் துறை அமைப்பான மின்சார வாகனங்கள் தயாரிப்பாளர்கள் சொஸைட்டி (எஸ்எம்இவி) ஒரு களஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் மின்சார வாகனங்கள் விற்பனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த தில்லி  ஏழாவது இடத்திற்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. எஸ்எம்இவியின் அண்மை ஆய்வில் மகாராஷ்டிரம்,  ராஜஸ்தான், உத்தர பிரதேசம்,  மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 2016-17-ஆம் ஆண்டில் 2 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
குஜராத்தில் 4 ஆயிரம் வாகனங்கள் விற்கப்பட்டு மின் வாகனங்கள் விற்பனையில் நாட்டிலேயே அந்த மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. எனினும்,  ஆரம்பத்தில் இந்தப் பட்டியலில் முதலிடம் வகித்த தேசியத் தலைநகரான தில்லி தற்போது வெறும் 1,072 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்எம்இவி அமைப்பின் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இயக்குநர் சொஹிந்தர் கில் கூறியதாவது: 
மாசு அளவு அதிகரித்து வரும் நிலையில்,  அதைக் குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பலர் பயன்படுத்தி வருவது நல்ல விஷயமாகும். பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்ற அளவைக் குறைக்க இதன் மூலம் உதவ  முடியும். எனினும்,  நாட்டின் தலைநகர் அந்தஸ்து பெற்ற தில்லியில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை விற்பனை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்  குறைவாக இருப்பது துரதிஷ்டவசமாகும். 
இதுபோன்ற மின்சாரத்தில் இயங்கும் கார்கள், ஸ்கூட்டர்கள் வாங்குவதற்கான மானியத்தை அளிப்பது, உள்கட்டமைப்பில் உள்ள பலவீனம் ஆகியவை சவாலாக உள்ளன. இவை சரி செய்யப்பட வேண்டியது அவசியமாகும். 
பல்வேறு நகரங்களில் அதிகரித்துள்ள காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு தூய எரிபொருள்,  மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பத்தை புகுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது.  மாநில அரசுகளும் பல்வேறு தொழில்துறை அமைப்புகளும் இணைந்து இந்த விவகாரத்தில் பணியாற்றவும், உலகளாவிய வாயு வெளியேற்ற விதிகளை எட்டும் வகையில் இந்தியாவுக்கான பசுமைமய கொள்கைகளையும் உருவாக்குவதில் ஈடுபடுவது அவசியமாகும். இதன் மூலம் பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதில் இந்தியா முன்னிலை பெற முடியும் என்றார் அவர்.


2016-17-ஆம் ஆண்டில் மின் வாகன விற்பனை
குஜராத்    4,330
மேற்கு வங்கம்    2,846
உத்தர பிரதேசம்     2,467
ராஜஸ்தான்    2,388
மகாராஷ்டிரம்    1,926
தில்லி    1,072

வருடம்    வாகனங்கள்
2014-15    16,000 
2016    22,000
2017    25,000

25,000 மின் வாகனங்களில் 
92% இருசக்கர வாகனங்கள்    8% நான்கு சக்கர வாகனங்கள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com