அனைத்து கிராமங்களிலும் மருத்துவ மையம்: அரவிந்த் கேஜரிவால் தகவல்

அனைத்து கிராமங்களிலும்  மருத்துவ மையம் (கிளினிக்) திறக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

அனைத்து கிராமங்களிலும்  மருத்துவ மையம் (கிளினிக்) திறக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 93 சதவீதம் தனியாருக்குச் சொந்தமாக உள்ளன. இந்நிலையில், 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுகாதாரம் என்ற இலக்கை ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு கிராமங்கள்தோறும் அரவிந்த் கேஜரிவால் கிளினிக் அமைக்க வேண்டும் என்று முதல்வரை குறிப்பிட்டு, தனது சுட்டுரையில் எழுத்தாளர் தேவேந்தர் சர்மா கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், "தில்லியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் மருத்துவ மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்' எனத் தெரிவிதுள்ளார்.
ஆம் ஆத்மி அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான மொஹல்லா கிளினிக் திட்டத்தின் கீழ், தில்லி முழுவதும் இதுவரை 158 கிளினிக்குள் அமைக்கப்பட்டுள்ளன. 
நிகழாண்டு இறுதிக்குள் மேலும் 1,000 மொஹல்லா கிளினிக்குகளை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், கிராமங்கள்தோறும் மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று  கேஜரிவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com