சிக்னேச்சர் மேம்பாலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

சிக்னேச்சர் மேம்பாலத் திட்டத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்காக  ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தில்லி சுற்றுலாத் துறை அமைச்சர்  ராஜேந்தர் பால் கெளதம் தெரிவித்துள்ளார்.

சிக்னேச்சர் மேம்பாலத் திட்டத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்காக  ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தில்லி சுற்றுலாத் துறை அமைச்சர்  ராஜேந்தர் பால் கெளதம் தெரிவித்துள்ளார்.
 வடகிழக்கு தில்லியையும்,  காஜியாபாதையும் ஓட்டிள்ள பகுதிகளையும் இணைக்கும் வகையில், யமுனை ஆற்றின் மேலே   வாஜிராபாத் பகுதியில் ரூ. 464 கோடியில் சிக்னேச்சர் பாலம் அமைப்பது குறித்து தில்லி அரசால் கடந்த 1997-ஆம் ஆண்டு முன்மொழிவு வைக்கப்பட்டது.   
பின்னர், இந்தத் திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை 2004-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. முதலில், தில்லியில் 2010-இல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு  பாலத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.1,131 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி பாலம் கட்டி முடிக்கப்படவில்லை.
பின்னர்,  2011-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு  சிக்னேச்சர் பாலப் பணியை 2013-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  
இதனிடையே, திட்டத்தின் ஆரம்ப கட்டச் செலவு 2015-ஆம் ஆண்டு ரூ. 1,594 கோடியாக உயர்ந்தது. திட்டத்தை நிறைவு செய்ய மீண்டும் 2016 ஜூன், 2017 ஜூன், 2017 டிசம்பர் என இலக்குகள் மாற்றியமைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து தில்லி அரசின் பொதுப் பணித் துறை உயரதிகாரி கூறியதாவது:
  ரூ.1,600 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தில் குதூப்மினார் அளவுக்கு இரு மடங்கு உயரமுள்ள ஸ்டீல் கோபுரங்களை அமைக்க ரூ. 20 கோடி கூடுதலாகச் செலவிடப்பட்டது.  
பாலத்தின் இறுதிகட்ட கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 100 கோடி  கூடுதலாக தேவைப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை தில்லி அரசுக்கு அளித்துள்ளோம். எனினும், இந்தக் கூடுதல் நிதிக்காக அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்கு 8 அல்லது 9 மாதங்கள் ஆகும் என கடந்த மே மாதம்  தெரிவிக்கப்பட்டது.  
இந்நிலையில், இத்திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தில்லி சுற்றாலாத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் தனது சுட்டுரையில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.  இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் விரைவில் திறக்கப்படும்  என நம்புகிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com