இந்திய ஹாக்கி அணிக்கு விஜய் கோயல் பாராட்டு

உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுகள் துறை

உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுகள் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) விஜய் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தது. இதையடுத்து, இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி கோல் அடித்த வீரர்கள் ஹர்மான்பிரீத், தல்வீந்தர் சிங், ஆகாஷ்தீப் சிங், பிரதீப் மோர் ஆகியோரை மத்திய இணை அமைச்சர் விஜய் கோயல் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உலக ஹாக்கி லீக் போட்டியில்
இந்திய ஹாக்கி அணி பங்கேற்பதற்காக பெங்களூருவில்
உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (எஸ்ஏஐ) தென் மையத்தில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதற்கான செலவு அனைத்தையும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. 18 வீரர்கள், 7 உதவி ஊழியர்கள் அடங்கிய குழுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் வழங்க அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டது.
விளையாட்டு அமைச்சகத்தால் 2017-18-ஆம் ஆண்டுக்கான காலத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பங்கேற்கும் வெளிநாட்டுப் போட்டிகளுக்காக தற்போது வரை சுமார் ரூ.3.20 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
முன்னதாக, இந்த போட்டியில் ஸ்காட்லாந்து, கனடா ஆகிய நாட்டு அணிகளையும் இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
பாட்மிண்டன் வீரருக்கு வாழ்த்து: இதேபோன்று, இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கும் மத்திய இணை அமைச்சர்
விஜய் கோயல் வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் விஜய் கோயல் கூறுகையில், "2017-18-ஆம் ஆண்டுக்கான காலத்தில் இந்திய பாட்மிண்டன் அணிக்காக வெளிநாட்டுப் போட்டிகளுக்காக தற்போதுவரை சுமார் ரூ.3.60 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விளையாட்டின் மேம்பாட்டுக்காகவும் உழைத்து வருகிறோம். இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், உதவி ஊழியர்களுக்கும் விளையாட்டுத் துறை அமைச்சகம் முழு ஆதரவை வழங்கும்.
விளையாட்டு வீரர்களுக்கு நல்ல வசதிகளையும், உதவி, ஆதரவை வழங்குவதற்காக மத்திய அமைச்சகத்தின் கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றார்.  
சூப்பர் சீரிஸ் பிரீமியர் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com