நாளை சர்வதேச யோகா தினம்: கனாட் பிளேஸில் 10 ஆயிரம் பேர்பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி!

சர்வதேச யோகா தினம் புதன்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தில்லியிலுள்ள கனாட் பிளேஸ் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர்

சர்வதேச யோகா தினம் புதன்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தில்லியிலுள்ள கனாட் பிளேஸ் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர்.
இதுதொடர்பாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைவர் நரேஷ் குமார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கனாட் பிளேஸ் பகுதியிலும், லோதி கார்டன், நேரு பார்க், தல்கடோரா கார்டன், இந்தியா கேட் குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களிலும் யோகா நிகழ்ச்சிகளுக்கு என்டிஎம்சி ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் கனாட் பிளேஸில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், முதல்வர் அரவிந்த் கேஜரிவால், புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.
இதேபோல நேரு பார்க்கில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
பதஞ்சலி யோக பீடம், வாழும் கலை, மா சக்தி, பிரஜாபிதா பிரம்ம குமாரிகள், காயத்ரி பரிவார் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தில்லி காவல்துறையினர், என்டிஎம்சி ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், எல்லை பாதுகாப்புப் படையினர், இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் ஆகியோரும் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.
யோகா நிகழ்ச்சியை முன்னிட்டு, கனாட் பிளேஸில் திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் புதன்கிழமை காலை 11.30 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், அப்பகுதியில் உள்ள கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டிருக்கும் என்றார் அந்த நரேஷ் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com