ராணுவ அதிகாரியின் மனைவியிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி

ராணுவத்தில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மனைவியிடம் வங்கி அதிகாரி என்று கூறி மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் ரூ. 50 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மனைவியிடம் வங்கி அதிகாரி என்று கூறி மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் ரூ. 50 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பாக நொய்டா செக்டார் 20-இல் பிரேந்தரா கௌர் என்ற பெண் அளித்துள்ள புகாரின் விவரம்:
மார்ச் 13ஆம் தேதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், எனது ஸ்டேட் பாங்கில் உள்ள எனது கிரெடிட் கார்ட் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கிரெடிட் கார்டை விடுவிக்க பின் நம்பர் உள்ளிட்ட தகவலைக் கேட்டார். நானும் அந்த தகவல்களைத் தெரிவித்தேன். பின்னர் சிறிது நேரத்தில் எனது கிரெடிட் கார்டில் மூன்று முறை இணையவழி பணப் பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில், ரூ. 20 ஆயிரம் இரண்டு முறையும், ரூ. 9,990 ஒரு முறையும் நடைபெற்றுள்ளது. இந்த மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com