வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும்போது, வாக்காளர்களுக்கு காகித ஒப்புகைச் சீட்டு அளிக்க வேண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும்போது, வாக்காளர்களுக்கு காகித ஒப்புகைச் சீட்டு அளிக்க வேண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும்போது, தாங்கள் வாக்குச் செலுத்திய நபருக்குத்தான் வாக்கு சென்றுள்ளதா? என்பதை உறுதி செய்ய வாக்காளர்களுக்கு காகித
ஒப்புகைச் சீட்டு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு 11 கடிதங்களை எழுதியுள்ளது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய பதிலை அளிக்காமல் அமைதிகாத்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளில் வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடைபெறுகிறது என்றார்.
அப்போது குறுக்கீட்டுப் பேசிய பாஜக எம்.பி.க்கள் சிலர், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி தேர்தல் நடைபெற்ற பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதே?' என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆசாத், "பஞ்சாபில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேபோல உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடத்த நீங்கள் தயாரா?' என்று கேள்வி எழுப்பினார்.
"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் காகித ஒப்புகைச் சீட்டு அளிக்கும் முறையை அமல்படுத்துவதற்கான நடைமுறையை இப்போதே தொடங்கினால்தான் மக்களவைத் தேர்தலில் அதனை முழுமையாக செயல்படுத்த முடியும்' என்றும் ஆசாத் தெரிவித்தார்.
பிரசாரத்துக்காக சில கட்சிகள் விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துவது என்று தேர்தலில் அதிக அளவில் பணத்தை செலவிடுவது குறித்தும் சில எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர்.
கட்சிகளுக்கான தேர்தல் செலவை அரசு ஏற்பது உள்ளிட்டவை குறித்தும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com