தீவிரவாத எதிர்ப்பு நாள்: முதல்வர் கேஜரிவால் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழியேற்பு

தீவிரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில், தலைமைச் செயலக அதிகாரிகள்

தீவிரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில், தலைமைச் செயலக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உறுதிமொழியேற்றனர்.அப்போது, "தடைகளை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும்' என்று அதிகாரிகளை கேஜரிவால் கேட்டுக்கொண்டார்.
தீவிரவாத எதிர்ப்பு தினம் மே 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை இருநாள்கள் தொடர்ந்து விடுமுறை தினம் வருவதால், தில்லி தலைமைச் செயலகத்தில் தீவிரவாத எதிர்ப்பு தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய கேஜரிவால், "அமைதி, சமூக நல்லிணக்கம், சகமனிதர்களை புரிந்துகொள்வது, மனித உயிர்களுக்கும், மதிப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் தடைகளுக்கு எதிராக போராடுவது ஆகிய உறுதிமொழிகளை அதிகாரிகள் ஏற்க வேண்டும்' என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் எம்.எம்.குட்டி, பொதுப் பணித்துறைச் செயலர் அஷ்வனி குமார், நகர மேம்பாட்டுச் செயலர் ஏ.அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com