தில்லி காவல்துறையின் 'பார் டாக்' விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு, மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுவதை தவிர்ப்பது போன்றவை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் 'பார் டாக்' என்ற புதிய டிஜிட்டல் முறை பிரசாரத்தை தில்லி காவல்துறை

பெண்கள் பாதுகாப்பு, மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுவதை தவிர்ப்பது போன்றவை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் 'பார் டாக்' என்ற புதிய டிஜிட்டல் முறை பிரசாரத்தை தில்லி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பார்கள், கிளப்புகள், ரெஸ்டாரண்டுகள் போன்ற இடங்களுக்கு மது அருந்த வருவோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த புதிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை காவல்துறை சிறப்பு ஆணையர் தீபேந்தர் பாதக் மற்றும் துணை ஆணையர் மதுர் வர்மா ஆகியோர் கனாட் பிளேஸில் உள்ள 'டெட்டி பாய் பாரில்' சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வுப் பிரசார உத்தியில், நகரில் உள்ள 25 பிரீமியம் பார்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, அவற்றில் வைக்கப்பட்டுள்ள 150 டிஜிட்டல் திரைகளில் தில்லியில் உள்ள பிரபல இடங்களான ஹெளஸ் காஸ், கனாட் பிளேஸ், நேரு பிளேஸ், கிரேட்டர் கைலாஷ், கான் மார்க்கெட், சாகேத் போன்ற இடங்கள் திரையிடப்படும். அத்துடன், பார்களில் வழங்கப்படும் சலுகைகளை தெரிவிப்பதுடன், மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுவதை தவிர்ப்பது தொடர்பான தில்லி காவல்துறையின் அறிவுறுத்தல்கள், பெண்கள் பாதுகாப்புக்கான ஹிம்மத் செயலி குறித்த விளம்பரங்களும் திரையிடப்படும்.
இதுகுறித்து, தீபேந்திர பாதக் கூறுகையில், 'இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் மூலம் மக்களை எளிதாக அணுகி பிரசாரம் செய்ய முடிகிறது. பார்கள் மற்றும் கிளப்புகளுக்கு மது அருந்த வருவோருக்கு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பதை அங்கேயே அறிவுறுத்த முடிகிறது. பார் டாக் உள் இணையச் சேவை மூலம் (இன்ட்ரா நெட்) வைஃபை தொடர்பை பயன்படுத்தி ஸ்மார்ட் செல்லிடப்பேசியைக் கொண்டு கட்செவி அஞ்சல் (வாட்ஸப்) செயலியைப் போன்றே குழு ஒன்றை உருவாக்கி கலந்துரையாடலாம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com