குடியரசுத் தலைவர் தேர்தல்: மதச்சார்பற்ற  பொது வேட்பாளருக்கு திமுக ஆதரவு

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று தில்லியில்

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று தில்லியில் நடைபெற்ற  எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் திமுக தெளிவுபடுத்தியது.
 தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற நூலக வளாகக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைவர்களுக்கு சோனியா காந்தி மதிய விருந்தளித்தார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு சார்பில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மதசார்பற்ற வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டால் அவரை ஒருமனதாக ஆதரிக்கலாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஒருவேளை ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மதச்சார்பற்ற வேட்பாளர் முன்மொழியப்படாவிட்டால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை  முன்னிறுத்தலாம் என்றும் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.  இது தொடர்பாக மேலும் விவாதிக்க குழு அமைக்கலாம் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தீர்மானித்தனர். அக்குழுவில் யார் இடம் பெறுவார்கள் என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.  
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ராஜ்மோகன் காந்தி நிறுத்தப்படுவாரா போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாது. உத்தேசமாக  எந்தவொரு வேட்பாளரின் பெயரும் இக்கூட்டத்தில் முன்மொழியப்படவில்லை.  அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டால் அதை ஒருமனதாக ஆதரிக்கலாம் என்றும் மதச்சார்பற்ற பொது வேட்பாளருக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது என்றார் கனிமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com