திராவகம் பதுக்கலை தடுக்க அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு

தலைநகரில் சட்டவிரோதமாக திராவகம் பதுக்கப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்

தலைநகரில் சட்டவிரோதமாக திராவகம் பதுக்கப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உத்தரவிட்டார்.
பெண்கள் பாதுகாப்புதொடர்பானபணிக் குழுக் கூட்டம் துணை நிலை ஆளுநர்அனில் பய்ஜால் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் பேசுகையில், "பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் இருந்து விடுதலையாவதற்கான காரணங்களை கண்டறியும் வழிமுறைகளை சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் உருவாக்க வேண்டும். அதேபோன்று, தலைநகரில் சட்டவிரோதமாக திராவகம் பதுக்கி வைப்பதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுக்கும் வகையில் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும். இதற்கு அனைத்து துறையைச் சேர்ந்தவர்கள்ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும். அனைத்து வாகனங்களிலும் வாகன செயல்பாட்டை கண்டறியும் குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம்ஸ் (ஜிபிஎஸ்) கருவியை பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும். தில்லியை பெண்களுக்கான பாதுகாப்பு நகரமாக உருவாக்க அனைத்துத் துறையினரும் முனைப்பான, ஒருங்கிணைந்த உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.இத்தகவலை துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com